நம்ம கூட்டாளி வெட்டி பயலோட நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் அழைப்பிதழுக்காக தேடிய போது இந்த பாடல் படித்தேன், அற்புதமான பாடல், இருவர் படத்தில் கேட்கும்போது இதன் அர்த்தம் புரியவில்லை, திண்ணை வலைத்தளத்தில் இதன் அர்த்தம் படித்தேன், உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். படித்து ரசிக்கவும்.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
(குறுந்தொகைப் பாடல் எண் நாற்பது. ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.)
பாடல் விளக்கம்.
"என் தாயும் உன் தாயும் எவ்விதத்திலும் அறிந்தவர் இல்லை. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவு கொண்டாருமிலர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை யொருவர் முன்னறிமுகம் எனவும் ஆயிலேம், எனினும் என்ன வியப்பு, நம் இருவருடைய இதயங்களும் சிவந்த நிலத்தில் பெய்த மழைநீர் எங்ஙனம் உருமாறி பிரித்தறிய வொண்ணாதபடி, மண்ணின் தன்மையை அடைந்து விடுமோ அதுபோல ஒன்று கலந்து விட்டன".
No comments:
Post a Comment