பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Thursday, June 11, 2020

சகோதர யுத்தம்

என்றோ எழுதிய ஒரு கட்டுரை

சகோதர யுத்தம் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி வெளியிட்ட ஒரு அறிக்கையின் ஒரு பகுதி

"சகோதர யுத்தத்தினால் நாம் பலவீனப்பட்டு விட்டோம். இன்றைக்கு இலங்கையிலே நடைபெறுகின்ற இந்த அக்கிரமங்களை இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், நாம் பலகீனப்பட்டது தான். இப்படி சகோதர யுத்தத்தால் நாம் பாழ் பட்டு விட்டோம் என்பதை மறந்து விடாமல், அந்த சகோதர யுத்தங்கள் காட்டிய பாடத்தை இப்போது நாம் பெற வேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கை தமிழர்களுக்கு ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய இந்த கூட்டத்திலே உறுதி எடுத்துக் கொள்வோம் என்றார் கருணாநிதி."


சில நாட்களுக்குப்பின் அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கை

"சகோதர யுத்தம் காரணமாக ஒட்டுமொத்தமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை.”வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டனர்’ என, நான் எழுதியது உண்மை தான். இதில் எந்தப் பிழையும் இருப்பதாக நான் உணரவில்லை.
பிரபாகரனால் தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என நான் கூறவில்லை.இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்."

பல லட்சகணக்கான மக்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்பட்ட ஒரு போராட்டத்தினை "சகோதர யுத்தம் " என்ற வார்த்தை மூலம் திரும்ப திரும்ப இழிவு படுதுகிறாரே என தமிழருவி மணியன் போன்ற அறிஞர்களும் பல்வேறு இணையதளங்களும் கடும் விமர்சனங்களை எடுத்து வைத்தனர்.

கருணாநிதியின் அறிக்கைகளை படித்தபோது, ஆத்திரம் வந்தது, இன்னொரு புறம் என்னுடைய சுயம் என்ற ஆராய்ச்சி நூலுக்கான முக்கியமான ஒரு தலைப்பை கொடுத்ததற்காக அவருக்கு மனதிற்குள் நன்றி சொன்னேன்.

ஒரு உயர் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மோதல், அப்பாவிப் பத்திரிகை ஊழியர்கள் மூவர் உயிருக்கே உலை வைக்கவில்லையா? இவ்வளவுக்கும் பிறகும் அந்தக் குடும்பத்தில் சகோதரத்துவம் குறைந்துவிடவில்லை.

இப்பொழுது சமீப காலமாக பத்திரிக்கைகளில் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி "தலைவர் கலைஞருக்குப் பிறகு திமுகவில் யாரையுமே நான் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். தலைவர் கலைஞரின் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை !" என்று சொன்ன பேட்டியும் பின்பு விமான நிலையத்தில் ''தி.மு.க., தலைமை பதவிக்கான தேர்தல் நடந்தால் அதில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன்'' என்று அறிவித்த பேட்டியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது மேலே பதிப்பித்துள்ள கருணாநிதியின் அறிக்கையை திரும்ப படித்து பார்த்தேன். தன் வினை தன்னை சுடும் என்பது போல் தன் வார்த்தை கூட தன்னை சுடும் என தோன்றுகிறது.

இதன் விரிவான கட்டுரை என் நூலில் 27.01.2041ல் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment