பிடித்தவை

  • புத்தகங்கள்
  • பயணம்
  • குழந்தைகள்

Sunday, July 7, 2013

இளவரசனின் மரணம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இளவரசனின் மனைவி திவ்யாவின் தந்தை இறந்ததே இதைபோன்றதொரு சூழ்நிலையில்தான். அதை எல்லா ஊடகங்களும் தற்கொலை என்றே எழுதின, ஏனென்றால் அப்பொழுது நடைபெற்ற கொள்ளை மற்றும் வன்முறை சம்பவங்கள் மீதுதான் அனைவரது கவனமும் இருந்தது, வழக்கம் போல நமது தமிழ்நாடு காவல்துறை எல்லாம் நடந்து முடிந்த பின்னர் வந்து வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்தது.

இப்பொழுதும் இளவரசனின் மரணம் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்திருந்தாலும், பல ஊடகங்கள் இதனை தற்கொலை என்றே எழுதி வருகின்றன, இது தற்கொலையாக இருக்க வாய்ப்பு  மிக மிக குறைவு, இதற்க்கான சில தடயவியல் மற்றும் பொதுவான விசாரணை நடத்தும் முறைகள் அடிப்படையிலான விளக்கங்கள்

1. இளவரசன் உடல் இருந்த நிலையை பார்க்கும்போது , ரயில் முன்பு அவர் விழுந்ததற்கான வாய்ப்பு இல்லை, ஏனென்றால் ரயில் மோதும்போது முதல் தாக்கம் ஏற்ப்படும் இடத்தை பொறுத்தே பிணம் விழக்கூடிய இடம் அமையும், இதில் இளவரசனது இடது முகம் பாதி சிதைந்து மூளை சிதறி உள்ளது, அப்படி என்றால் அவர் உடல் தூக்கி எறியப்பட்ட இடம் தண்டவாளத்தின் மிக அருகிலோ அல்லது தண்டவாளங்களுக்கு இடையிலோ தான் அமைய வேண்டும்.



2. ரயில் மோதியது இடது பக்க முகப்பகுதி என்றால் இளவரசனது உடல் தற்போதுள்ள பக்கத்தில் இல்லாமல் எதிர் பக்கத்தில் இருந்திருக்கும். இது விளக்க சற்று சிக்கலான விஷயம், இதனை அனுபவம் மிக்க காவல் துறை அதிகாரிகளோ அல்லது காவலர்களோ எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

3. ரயில் மோதியதாக இருந்தால், அந்த ரயில் ஓட்டுனர் தனது மேலதிகரிகளுக்கு தகவல் அளித்திருக்க வேண்டும், அதுவும் இங்கு நடக்கவில்லை.

4. அங்கு இருந்த மது பாட்டில்கள் முறையாக கை ரேகை நிபுணர்களால் ஆராயபட வேண்டும்.

5. மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிடபட்டு உள்ள நேரத்திற்குள் இளவரசனது கை பேசி அழைப்புக்கள் மற்றும் அந்த இடத்தில் உள்ள அனைத்து தொலை தொடர்பு தொடர்பு நிறுவனங்களின் பயனாளர் பட்டியல் பெற பட்டு முழுமையாக ஆராயப்பட வேண்டும்.

6. இளவரசனது உடைகள் இருந்த நிலையும் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறுவதற்கு எள்ளளவும் வாய்ப்பளிக்கவில்லை, வாழ்க்கையை முடித்து கொள்ளும் ஒருவன் எப்படி பொறுமையாக தன்னை அலங்காரப்படுத்தி கொள்ள முடியும்?

7. இத்தனை மாதங்களாக பிரச்சனைகளை எதிர்கொண்ட இளைஞன், அவர் எதிர்பார்த்தது போலவே அல்லது பயந்தது போலவே தன் மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாக சில ஊடகங்கள் எழுதுவது, அதை எழுதியவரின் அறிவின்மையே காட்டுகிறது.

8. சம்பவம் நிகழ்ந்த அன்று அவர் காலையில் இருந்து மிக இயல்பாகவே இருந்துள்ளார், இதனை அவரது தந்தை மற்றும் அத்தையும் உறுதி செய்து உள்ளனர்.

காவல் துறை சற்று ஆழ்ந்து இந்த மரணத்தினை பற்றிய சந்தேகங்களை தெளிவு படுத்தினால் மட்டுமே, தர்மபுரியில் நிரந்தர அமைதி ஏற்படும்.




சற்று முன்பு ஒரு பத்திரிக்கையின் வலைதளத்தில் வந்த செய்தி

"இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை செய்துகொண்டான் என்கிறது அவரது கடிதங்கள்.

தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டது கடிதம் மூலம் உறுதியாகியுள்ளது என மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.

மேலும் அவர், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் இளவரசன் கூறியுள்ள தாகவும் கூறினார்."

No comments:

Post a Comment