மனிதர்களை அவர்களின் புற தோற்றத்தை வைத்து எடை போடுவது தவறு என எனக்கு புரிய வைத்த ஒரு சம்பவம்.
1999 வது வருடம் மே மாதம் ஒரு நண்பரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்று, பின் அங்கிருந்து தஞ்சாவூர், பிச்சாவரம் முதலிய இடங்களை சுற்றி பார்த்து விட்டு வந்தோம். அப்பொழுது பிச்சாவரத்தில் இருந்து தஞ்சாவூர் வரும்போது பேருந்தில் சிறுவர்கள் சிலர் கட்டுமான பணிக்கு போகும் உபகரணங்களோடு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது நான் என் அருகில் இருந்த சிறுவனிடம் "தம்பி, படிக்கும் வயதில் இப்படி வேலைக்கு போனால் பிறகு உன் எதிர் காலம் என்ன ஆகும் என் அறிவுரை கூற முற்பட்டேன்.
உடனே அவன் கோபமாக "நான் படிக்கலேன்னு யார் சொன்னா? நான் அரசு பள்ளிகூடத்துல நாலாப்பு படிக்கிறேன், விடுமுறைல வேலைக்கு போய் அந்த காசுல என் கல்வி கட்டணம் கட்டுவேன் மற்றும் புத்தகம் வாங்க உபயோகபடுத்தி கொள்வேன்" என்று சொன்னான். ஒரு இரண்டு வினாடி எனக்கு ஒன்றுமே புரியவில்லை,
வேதம் புதிது படத்தில் அய்யர் வீட்டு சிறுவன் முற்போக்குவாதியான பாலுத்தேவரிடம் "உங்க பேர் என்ன?" என்பான்.
அதற்கு அவர் " பாலுத்தேவர்" என கம்பீரமாக சொன்னதும் "பாலுங்கறது உங்க பேரு தேவர்ங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா, ஜாதி இல்லே ஜாதி இல்லேன்னு சொல்ற நீங்களே மூச்சுக்கு முந்நூறு தடவ இத சொல்றீங்களே" என சிறுவன் கேட்டதும் பளார் பளார் என கன்னத்தில் அறைந்தது போலிருக்கும் பாலுத்தேவருக்கு.
இதே நிலைமையில்தான் நானும் இருந்தேன். அசிங்கபட்டாண்டா அண்ணன்.
இதே போன்று ஐரோப்பாவில் நடந்த ஒரு சம்பவம், ஒரு திறமை அறியும் நிகழ்ச்சிக்கு வரும் சூசன் பைல் என்ற 47 வயது பெண்ணிடம் நீங்கள் யாரை போல் ஆக வேண்டும் என்று கேட்கும்போது, நான் சலின் பேஜ் எனும் பாடகியை போல வரவேண்டும் என அந்த பெண் சொன்னதும் அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் ஏளனமான சிரிப்பை வெளிப்படுத்துவார்கள். அனால் அந்த பெண் பாட தொடங்கிய அடுத்த சில நொடிகளில் மொத்த அரங்கமே எழுந்து நின்று கை தட்ட ஆரம்பிக்கும், அந்த பெண் பாடி முடித்த பிறகு நடுவர்களில் ஒருவர் அப்படி நடந்ததற்கு மன்னிப்பும் கேட்பார்.
இந்த சுட்டியில் அந்த வீடியோவை காணலாம்.
http://www.youtube.com/watch?v=cf42Q7taBsk

சுசன் போய்ல் பாட ஆரம்பித்ததும் அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களின் முகபாவனைகளைக் காட்டுவார்கள். அந்தக் காட்சி ஒரு வித்தியாசமான பரவச அனுபவம். என்ன ஒரு குரல்!!!
ReplyDelete